ஆக:12
நாகை மாவட்டம் வேதாரண்யம் தீ த லீடர்ஸ் அமைப்பின் சார்பில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கடற்கரைக்கு புனித நீராட வரும் பக்தர்களுக்கு சிற்றுண்டி குளிர்பானம் வழங்கப்பட்டது.

ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்கள் கோடியக்கரை மற்றும் வேதாரணியத்திற்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு புனித நீராட வருவது வழக்கம் இதனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன பக்தர்களின் வசதிக்காக.

வேதாரணியம் சட்டமன்ற தொகுதி வீத லீடர்ஸ் அமைப்பின் சார்பில் சுமார் 1000 பக்தர்களுக்கு சிற்றுண்டி மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.

நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவராசு ,வைரமுத்து, கவிதா பாபு, சரவணன் கருணாநிதி, ஆகியோர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இந்த தன்னார்வலப் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வித லீடர்ஸ் அமைப்பு மற்றும் கவிதா பாபு அறக்கட்டளை இணைந்து நடைபெற்ற நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து இருந்தனர்.
