திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை, மலேசியா,சிங்கப்பூர் துபாய் ,வியட்நாம் போன்ற பல்வேறு சர்வதேச நாடுகளுக்கு சர்வதேச விமான சேவையும் உள்நாட்டு விமான சேவையும் வழங்கி வருகிறது திருச்சி விமான நிலையம்.
தற்போது புதிய பொலிவுடன் அதிக வசதிகளுடன் சர்வதேச விமான நிலையம் ஆன திருச்சி மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாதத்திற்கு 2 லட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை கையாளும் விமான நிலையமாக திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் மாறி உள்ளது .
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு அதிக அளவிலான விமான போக்குவரத்துக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய சேவைகளும் வருங்காலத்தில் உருவாகுவதற்கான பெருவாய்ப்பை திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் தற்போது ஏற்படுத்திக் கொண்டுள்ளது .
