திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்க பணிக்காக 255 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தி கொள்ள இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு தமிழ் நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 12,500 அடியாக ஓடுபாதை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், தமிழ்நாட்டின் மிக நீளமான ஓடு பாதையாகவும், நாட்டின் 5வது பெரிய ஓடுபாதையாகவும் மாற உள்ளது.
குறிப்பாக, தமிழகத்தில் உள்ள பாதையில் சென்னை முதலிடத்தில் உள்ளது.
இரண்டாவது இடத் தில் கோவை உள்ளது. அதில் 9,809 அடி நீளம் 3வது இடத்தில் திருச்சி 8,136 அடியாக உள்ளது. 4வது இடத்தில் மதுரை 7,497 அடி நீளம் உள் ளது. திருச்சியின் ஓடு பாதையை 12,500 அடி நீளமாக அதிகரித்தால், தமிழ்நாட்டில் மிக நீளமான ஓடு பாதை உடைய விமான நிலையமாக திருச்சி மாறும். முக்கியமாக, டெல்லி, ஐதராபாத். பெங்களூரு, ஐஎன்எஸ் ராஜாளிக்கு அடுத்தபடியாக நாட்டின் 5வது நீள மான ஓடுபாதையாக திருச்சி விமான நிலைய ஓடுபாதை அமையும். ஓடு பாதை விரிவாக்கம் செய்யப்பட்டால், விமானங்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.
