தாய் கிழவி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருப்பவர் தான் சிவகுமார் முருகேசன்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான தாய் கிழவி ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது .
படம் முழுக்க காமெடி நிறைந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன அதே நேரத்தில் பெண்கள் எவ்வளவு வலிமையாக இருக்க வேண்டும் என்ற கருத்தை இந்த திரைப்படம் மிகவும் நேர்த்தியாக சொல்லி இருக்கிறது.
ரசிகர்கள்குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு சென்றும் படம் பார்த்து வருகின்றனர் .
தாய்க்கிழவி திரைப்படம் ஐந்து நாள் முடிவில் ரூபாய் 29.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வரும் நாட்களில் இந்த திரைப்படத்தின் வசூல் மற்றும் திரையரங்குகளின் எண்ணிக்கை கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது
