இந்திய செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்கள் சிங்கப்பூரில் அமைச்சருடன் சுற்றுலா -மகிழ்ச்சி உள்ளத்தில் தமிழக மாணவர்கள்!

தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழக பள்ளி மாணவர்கள் தற்போது சிங்கப்பூர் சுற்றுலா சென்றுள்ளனர். இதில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி  அவர்களும் கலந்து கொண்டுள்ளார்.

சிங்கப்பூரின் பிரபல சுற்றுலா தளமான  Gardens by the Bay எனும் நகர்ப்புற பூங்காவை அரசுப் பள்ளி மாணவர்களுடன் கல்வித்துறை அமைச்சரும் பார்வையிட்டார்.

Gardens By The Bay

சிங்கப்பூர் நாட்டின் நீடித்த நிலைத்தன்மைக்காக மேற்கொள்ளப்பட்டவரும் முயற்சிகள் குறித்தான பல்வேறு தகவல்களை அளிக்கும் Marina Barrage மாணவர்கள் பார்வையிட்டனர் .சிங்கப்பூர் நாட்டின் கட்டமைப்பில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் குறித்தும், வருங்காலத்தின் செயல்பாடுகள் குறித்தும் கல்விசார் பயிற்றுநர்கள் விளக்கங்களை வழங்கினார்கள்.

Marina Barrage

முன்னதாக விமான நிலையத்தில் வந்து இறங்கிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை மருது சேனை அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர்     திரு.ஆதிமகேஷ் அவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

Singapore Airport

Related Posts