சிங்கப்பூர் கேலாங் ஈஸ்ட் அருள்மிகு சிவன் ஆலய கும்பாபிஷேகம் ஜூன் எட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
சிங்கப்பூரில் உள்ள மிக முக்கியமான கோவில்களில் ஒன்று ஸ்ரீ சிவன் ஆலயம் இதன் ஆலய வரலாறு 1800 ஆம் ஆண்டிலிருந்து துவங்கியது என கூறப்படுகிறது .
சிங்கப்பூரில் இன்று கும்பாபிஷேகம் செய்ய பட்ட ஸ்ரீ சிவன் ஆலயம் முன்பு தூபிகாட் பகுதியில் அமைக்கப்பட்டது பின்பு சிங்கப்பூரில் கேளான் ஈஸ்ட் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது என்பதன் குறிப்பிடத்தக்கது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில். பக்தி பரவசத்துடன் நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்திற்கு சிங்கப்பூரர்கள் மலேசியர்கள் இந்தியர்கள் குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் சென்று பணிபுரியும் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்
