சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகத்தின் சார்பில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
சிங்கப்பூர் மனித வள அமைச்சகம் மற்றும் சிங்கப்பூரில் செயல்பட்ட வரும் இந்திய தூதரகம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 2000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

நாள் முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது குறிப்பாக. தென்னிந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் ஒவ்வொரு பெயர்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.
ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழாவில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்ததாக வெளிநாட்டு ஊழியர்கள் தெரிவித்தனர்.
