சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் தேசிய தின கொண்டாட்டம் தமிழக ஊழியர்களும் உற்சாகம் -களைகட்டிய தேக்கா

சிங்கப்பூரில் இன்று 59 வது தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி  இன்று சிங்கப்பூருக்கு தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .விடுமுறை என்பதால் சிங்கப்பூரர்கள் மட்டும் அல்லாமல் தமிழகத்தைச் சேர்ந்த ஊழியர்களும் விடுமுறையை கழித்து வருவதோடு.தேசிய தின அணிவகுப்பையும் கண்டு வருகின்றனர்.

சிங்கப்பூரின் முக்கிய வர்த்தக பகுதியாக கருதப்படும் லிட்டில் இந்தியா அதாவது தேக்கா பகுதி என்பது குட்டி தமிழ் நாடாகவே திகழ்ந்து வருகிறது .குறிப்பாக தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் சென்று பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் சொர்க்க பூமி என்றால் அது தேக்கா பகுதி தான்.

நண்பர்களை சந்திப்பதற்கு ஏற்ற இடமாகவும் தமிழர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் உடை என அனைத்து வகையான பொருட்களை வாங்குவதற்கும் சிறந்த இடமாக விளங்குகிறது தேக்கா பகுதி. விடுமுறை என்பதால் இன்று தேக்கா பகுதியில் அதிக அளவிலான தமிழர்கள் குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts