சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் MOM வெளிநாட்டு ஊழியர்களுக்காக கட்டும் அதிநவீன தங்கும் விடுதி !

சிங்கப்பூரில் இந்தியாவின் குறிப்பாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தியா மட்டுமல்லாது மலேசியா ,தாய்லாந்து, ஸ்ரீலங்கா ,பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து ஊழியர்கள் சிங்கப்பூரில் பணியாற்றி வருகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்து  பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் முதன் முறையாக வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதி கட்டி வருகிறது.

மனிதவள அமைச்சகத்தால் கட்டப்பட்ட வரும் இந்த வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது 2400 வெளிநாட்டு ஊழியர்கள் அதிநவீன வசதிகளுடன் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு மனிதவள அமைச்சகத்தின் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி திறக்கப்பட உள்ளதாக சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது

Related Posts