சிங்கப்பூரில் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .இதனால் சிங்கப்பூரில் உள்ள செல்போன் விற்பனை நிறுவனங்கள் விற்பனையில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் சிப்கள் தட்டுப்பாடு காரணமாகவும். உலக அளவில் எரிவாயு உற்பத்தியில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால். தற்போது ஸ்மார்ட் போன்கள் விலை ஏற்றத்தை எதிர்நோக்கி உள்ளன.
முன்பு 200 வெள்ளிக்கு விற்கப்பட்ட மொபைல் 5G ஸ்மார்ட் போன்கள் தற்போது 350 வெள்ளி வரை விற்பனையாகி வருகிறது.
சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் செல்போன் விலை மிகவும் குறைவு என்பது அனைவரும் அறிந்தது ஆனால் இந்த தட்டுப்பாடு காரணமாக தற்போது அனைத்து வகையான ஸ்மார்ட் போன்கள் கிடைப்பதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது மட்டுமல்லாமல். விலையிலும் ஏற்றம் காணப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சிங்கப்பூரில் உள்ள செல்போன் விற்பனை நிறுவனங்கள் தற்போது தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
