சிங்கப்பூர் செய்திகள்

களைகட்டிய சிங்கப்பூர் லிட்டில் இந்தியா சீன புத்தாண்டு!

சிங்கப்பூரின் முக்கிய வர்த்தகப் பகுதியாக கருதப்படும் தேக்கா லிட்டில் இந்தியா பகுதியில் சீன புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஊழியர்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் ஒன்று கூடினர்.

நடப்பு வாரத்தில் சீன புத்தாண்டு விடுமுறை ஒரு வாரத்திற்கும் மேலாக சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கி உள்ளது. வார இறுதி நாட்களில் சிங்கப்பூரில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் தேக்கா பகுதியில் ஒன்று கூடி நண்பர்களை சந்தித்தும் உணவு அருந்தியும் சீன புத்தாண்டை கொண்டாடினர் .

வார இறுதி நாட்களுடன் கூடிய சீன புத்தாண்டு விடுமுறை முன்னிட்டு சிங்கப்பூர் லிட்டில் இந்தியா உணவகங்கள் செல்போன் கடைகள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது .இதனால் குறிப்பிட்ட தக்க அளவில் சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் வர்த்தகம் நடைபெற்றது.

Related Posts