உலக அளவில் தங்கங்கள் குறிப்பாக ஆபரண தங்கங்களில் துபாய் மற்றும் சிங்கப்பூர் தங்கம் மிகவும் தூய்மையானதாகவும் அதே அளவில் விலை குறைவாகவும் இருக்கும் என சர்வதேச அளவில் கருதப்படுகிறது.
சிங்கப்பூரை பொறுத்தவரை குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூர் செல்பவர்கள் வரும்பொழுது அவர்களுக்கு தேவையான தங்கத்தை குறிப்பாக ஆபரண தங்கத்தை வாங்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரின் தேக்கா பகுதிகளில் இருக்கக்கூடிய ஆபரண தங்க விற்பனையாளர்கள் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு சலுகைகளை அறிவித்து தங்க விற்பனையில் அந்த நிறுவனங்கள் தற்போது ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தீபாவளியை முன்னிட்டு தொடர் விடுமுறை இருப்பதால் சிங்கப்பூரிலிருந்து பலர் தமிழகத்திற்கு வருகின்றனர் எனவே தற்போது தேக்கா பகுதியில் சிங்கப்பூரில் வார இறுதி நாட்களில் தங்க விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .