சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் உயிருக்கு போராடிய கிளி ஒன்றை காப்பாற்றிய சிங்கப்பூரின் பிரபல TikToker!

சிங்கப்பூரின் குடியிருப்பு வளாகத்தில் பச்சைக்கிளி ஒன்று காயத்துடன் அடிபட்டு பறக்க இயலாமல் தவித்து வந்தது. அந்த குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த   சரண்யா அந்த பறவையை மீட்டு பாதுகாப்பாக தனது இல்லத்தில் வைத்திருந்தார் .

மேலும் அந்த பச்சைக்கிளியின் கழுத்து பகுதியில் காயம் இருந்ததால் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான முயற்சிகளை சரண்யா மேற்கொண்டார் .

காயமடைந்து பறக்க முடியாமல் இருந்த அந்த பச்சைக்கிளி ஒரு வளர்ப்பு கிளி என்பது குறிப்பிடத்தக்கது மேலும் வளர்ப்பு கிளியை யாரேனும் தவற விட்டீர்களா என்று  சரண்யா அக்கம் பக்கத்தில் விசாரித்தார்.

அந்த பச்சைக்கிளியை யாரும் உரிமை கோராததால் அதனை பாதுகாக்கும் வகையில்  சிங்கப்பூரில் உள்ள தேசிய பூங்கா கழகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தேசிய பூங்கா கழகத்திலிருந்து வருகை தந்த ஊழியர்களிடம் பச்சைக் கிளியை ஒப்படைத்தார் .

சரண்யா இன்று காலை தனது குடியிருப்பு வளாகத்தில் நடைபயிற்ச்சி மேற்கொள்ளும் போது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்தார் .

சரண்யா சிங்கப்பூர் டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts