இந்திய செய்திகள்

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர் சாம்பியன் குகேஷ்

சிங்கப்பூரில் நடைபெற்று வந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று, வரலாற்றில் முதல் முறையாக இளம் வயதில் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றிருக்கும் இந்திய வீரர் குகேஷ் அவர்களுக்கு இந்திய பிரதமர்                    திரு. நரேந்திர மோடி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்

18 வயதில் உலக செஸ் சாம்பியன் குகேஷ் அடைந்திருக்கும் இந்த வெற்றி இலக்கானது, இந்திய தேசத்தில் உள்ள அனைவரையும் பெருமையடைய செய்திருப்பதுடன், பிற இளைஞர்களுக்கும் செஸ் விளையாட்டின் மீதான ஈர்ப்பை அதிகரித்துள்ளது.

தற்போது இந்தியாவில் இளம் விளையாட்டு வீரர்கள் உருவாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts