இந்திய செய்திகள்

சிங்கப்பூர் நிறுவனத்தை சிறப்பு விருந்தினராக பங்கேற்று திறந்து வைத்த தூய்மை பணியாளர் பத்மா!

February 8

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் பிரபல செல்போன் கடை தான் யுனிவர்சல் இந்த நிறுவனத்தின் கிளை தற்போது தமிழ்நாடு முழுவதும் திறக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் புதிய கடை இன்று திறக்கப்பட்டது இந்த கடைக்கு சிறப்பு விருந்தினராக தூய்மை பணியாளர் திருமதி.  பத்மா அழைக்கப்பட்டு இருந்தார் .

சென்னையில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த  திருமதி. பத்மா அவர்களுக்கு குப்பையில் இருந்த 45 சவரன் ரூபாய் 45 லட்சம் மதிப்புள்ள தங்கம் கிடைத்தது .இந்த தங்கத்தினை நேர்மையுடன் காவலர்களிடம் ஒப்படைத்து உரியவரிடம் சேர்த்தார்.

உரியவரிடம் தங்கத்தை சேர்த்ததால் அவரின் நேர்மையை பாராட்டும் வகையில் பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களையும் பரிசினையும் வழங்கி உள்ளனர்.

சிங்கப்பூர் யூனிவர்சல் நிறுவனத்தின் கிளை நிறுவனமான சுதன் மொபைல் சென்னையில் திறக்கப்பட்டது. இதற்கு அந்த நிறுவனத்தின் உரிமையாளர் திரு .சுதன் தூய்மை பணியாளர் திருமதி. பத்மா அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து தனது கடையை திறக்க வைத்துள்ளார்.

தூய்மை பணியாளர் சீருடை உடன் இங்கு வந்திருக்கிறீர்களே கடைக்காரர்கள் உங்களை சீருடையுடன் வர சொன்னார்களா என்று ஊடகத்தினர் கேட்ட கேள்விக்கு இதுதான் எனக்கு பெருமை என திருமதி. பத்மா பதில் அளித்துள்ளார் .

யுனிவர்சல் மற்றும் சுதன் மொபைல்ஸ் நிறுவனர் கூறியதாவது   திருமதி. பத்மா அவர்கள் எங்களது கடையை திறந்து வைத்திருப்பது எங்களுக்கு மிகவும் பெருமை அளிப்பதாக தெரிவித்திருக்கிறார் .

English Version

Related Posts