இந்திய செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவாக பாஜக ஆர்ப்பாட்டம் -கருப்பு முருகானந்தம் பேட்டி

கும்பகோணம் அருகே சாக்கோட்டை கிராமத்தில் மாநில சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார் பாஜக மாநில பொதுச் செயலாளர்
திரு. கருப்பு முருகானந்தம்

கும்பகோணம் சாக்கோட்டை கிராமத்தில் அதிமுக அரசு நெடுஞ்சாலை பணிக்காக 2017 ல் போட்ட அரசு உத்தரவை  மாற்றி கட்சிக்காரர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு ஏழை விவசாயிகளை வஞ்சிக்க கூடிய திமுக அரசு. பருத்தி பயிர்களை காக்க போராடிய விவசாயிகளை கைது செய்ததோடு அவர்களுக்கு ஆதரவாக போராடிய முன்னாள் மாவட்ட தலைவர் சதீஷ் அவர்கள் மீதும் வழக்கு பதிந்துள்ளது கண்டனத்திற்குரியது, விவசாயிகளுக்கு ஆதரவாக வருகின்ற 2 ஆம் தேதி புதன்கிழமை பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்பதையும் அதில் முன்னாள் தேசிய செயலாளர்

எச். ராஜா அவர்கள் கலந்து கொள்வார்கள் என பாஜக மாநில பொதுச் செயலாளர்

திரு .கருப்பு முருகானந்தம்  தெரிவித்துள்ளார் .

Related Posts