
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சிங்கப்பூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில்
நேற்று அதாவது 13- 1- 2024 அன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது .இந்த பொங்கல் பண்டிகையில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .

பொங்கல் விழாவானது சரியாக 3 மணிக்கு துவங்கியது இதில் பச்சரிசி வெல்லம் கரும்புகளை வைத்து நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களால் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.பிறகு நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் பொங்கல் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு தங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தினர். குறிப்பாக கோல போட்டியில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும் கோலங்கள் இடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கோலப்போட்டியில் மேலும் இந்திய தேசிய பறவையான மயில் மற்றும் முழுமுதற் கடவுளான விநாயகரை பிரதிபலிக்கும் வகையிலான கோலங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது .


மேலும் கோல போட்டியில் பெண் ஒருவர் விளக்கு ஏற்றுவது போன்ற கோலம் மற்றும் ரங்கோலி கோலங்களும் இடம் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் ஆண்களுக்காக வார்த்தை விளையாட்டு .மியூசிக்கல் சேர் போன்ற நகைச்சுவை உணர்வுடன் கூடிய விளையாட்டுகள் நடத்தப்பட்டன .
நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு நிறுவனத்தினுடைய இயக்குனர் பரிசுகளை வழங்கினார்.