அரசியல் செய்திகள்

உயிர் நிறைந்த உடன்பிறப்பு Rs.அன்பழகனார்

உயிர் நிறைந்த உடன்பிறப்பு,பிச்சன்கோட்டகம்,வடபாதி.திரு.ஆர்.எஸ்.அன்பழகனார் அவர்களுக்கு புகழேந்தல்.


பிச்சன்கோட்டகம்,வடபாதி. திருமிகு.
ஆர்.எஸ்.அன்பழகனார் அவர்கள்…!

எந்த உயிருக்கும்
இடையூறு தராத அன்பாளர்…!

பாசத்தையென்றும் நெஞ்சத்தில் கொண்டிருந்த பண்பாளர்…!

புன்னகையை மட்டுமே தனக்குள் வைத்திருந்த பொன்மகனார்…!

சிரிப்பால் மட்டுமே அனைவரையும் அணைத்துக் கொள்ளும் உத்தமனார்…!

கோபத்தைக் கூடக் குளிரூட்டி தனியச் செய்த சான்றோன்…!

தன் பார்வையால் மொட்டுகளைக் கூட மலர வைத்த
மென்மையாளர்…!

அனைத்து உயிர்களுக்கும் உணர்வூட்டி…!

மழையென பாசத்தைப் பொழிந்து
தழைக்கச் செய்து…!

எல்லோருக்கும்
நல்லவைகளையே நல்கிய
மேன்மையாளர்…!

தென்றலாய் உலா வந்து
நட்பை
அன்பால் தழுவிய அற்புதர்…!

அநீதி படையெடுக்கும் தருணங்களில்
அதை
அழிக்க புயலாய் மாறிய
அக்னி வீரர்…!

அவரது இதயச் சிறையில்
அகப்பட்ட யாருக்கும்
எந் நிலையிலும்
அவர்
விடுதலைக் கொடுத்ததில்லை…!

சூரியனாய் சுழன்று
கழகப் பணிகள்
அனைத்தையும் கையிலெடுத்து
கச்சிதமாக களம் காண்ட
கடமையாளர்…!

எந்த சூழலிலும்
தடுமாறி
தடம் மாறாது
பயணித்த கண்ணியனார்…!

நியாயத்தை
என்றும்
தன்னுள்ளேயே
வசப்படுத்திருந்த
கட்டுப்பாட்டாளர்…!

கழகத்தையே
அவர்
தன் குடும்பமாகக் கொண்டிருந்தார்…!

அக்குடும்பத்தில்
உள்ள
சகலமானவர்களுமே…!

அவருது
உயிர் நிறைந்த உறவினர்கள்…!

அனைத்து
நிகழ்வுகளிலும்
அவரது
பொன்
புன்னகை ஒளிரும்…!

அங்கே அவரது
மலர் முகம்
அழகாய்
மிளிரும்…!

அதைப்
பார்க்கும் உள்ளமெல்லாம்
குளிரும்…!

இன்று
அவர்.

நம்மை விட்டு.

தன் உடலால்
மறைந்து இருந்தாலும்…

உள்ளத்தில்
என்றும்
உயிர்ப்பாய் இருப்பார்…!

உதிராது
நாளும்
நெஞ்சத்தில்
நிறைந்தே இருப்பார்…!

விலகாது.

பொழுதெல்லாம்
இதயத்தில்
பொளிவோடிருப்பார்…!

அவர்
வானம் சுருளும்
காலம் வரை…!

பூமி அழியும்
காலம் வரை…!

சூரியன் தன்னை
முடக்கிக் கொள்ளும்
காலம் வரை…!

கடல் முற்றிலும்
வற்றிவிடும்
காலம் வரை…!

தென்றல் உலவாது ஒடுங்கும்
காலம் வரை…!

நம் சுவாசத்திற்கு
காற்றாயிருந்து
நமது
உயிருக்கு உணர்வாய் இருப்பார்…!

ஐயா
ஆர்.எஸ்.அன்பழகனார் அவர்களை
நமது நினைவுக்குள் வைத்து…!

நெஞ்சத்தில் தைத்து…!

இதயத்தில் கோர்த்து…!

உள்ளத்தில் உயர்த்திப் போற்றி, வணங்குவோமாக…!

வாழ்க அவரது புகழ்…!

வெல்ல வைப்போம்,
அவரது நோக்கத்தையும்,லட்சியத்தையும்…🙏
நன்றி.

நீங்கா நினைவுகளோடு:

கவிஞர்.மருதூர் மாமு.
8754469108

Related Posts