தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா ஆதரவற்றோர் முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு நீங்கள் நிதி உதவி அல்லது பொருளுதவி அளித்தால் அவர்கள் இந்த வருடம் தீபாவளியை கொண்டாட நீங்கள் உதவலாம்.
இந்த காப்பகம் நீண்ட ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்கள் தங்கி உள்ளனர். இவர்களுக்கு பொருளுதவி அதாவது துணிகள் மற்றும் பட்டாசுகள் அல்லது நிதி உதவி உங்கள் வீட்டு இல்ல சுபநிகழ்ச்சிகள் மற்றும் நினைவு நாட்களில் உணவு வழங்குவதன் மூலம் இவர்களுக்கு நீங்கள் உதவலாம் .
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ராஜா மடத்தில் இந்த காப்பகம் சிறந்த முறையில் செயல்பட்டு வருவதை அறிந்தே இந்த தகவல் செய்தியாக இந்த தளத்தில் வெளியிடப் படுகிறது என்பதை அறியவும் .
உங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் ஒருநாள் உணவினை இந்த காப்பகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் வழங்கலாம். மேலும் இவர்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாட பொருளுதவி அல்லது நிதி உதவி நீங்கள் வழங்கலாம் தொடர்புக்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
காப்பகத்தின் நிர்வாக இயக்குனர் மணிவண்ணன் தொடர்புக்கு +919629972164