இந்திய செய்திகள்

சிங்கப்பூர் தமிழ்நாடு விமான டிக்கெட் விலை ஏற்றத்தால் தொழிலாளர்கள் பயணிகள் அவதி!

கோடை விடுமுறை மற்றும் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு தாயகம் திரும்ப நினைக்கும் சிங்கப்பூர்  வாழ் இந்திய பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். போதிய விமானங்கள் இல்லாததாலும், தற்போதைய விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்து உச்சத்தைத் தொட்டுள்ளதாலும் சாதாரண தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவசரத் தேவைக்குக் கூட சொந்த ஊர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு கூடுதல் விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவசர தேவைகளுக்காக தாயகம் திரும்ப விரும்பும் சாதாரண தொழிலாளர்கள் விமான டிக்கெட் விலை ஏற்றதால் பாதிக்கப்பட்டதுடன் மட்டும் இல்லாமல் போதிய விமானங்களும் இல்லை என தெரிவிக்கின்றனர் .

குறிப்பாக தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மற்றும் கோவை மதுரை ஆகிய நகரங்களுக்கான  விமான டிக்கெட் களின் விலையும் ஏறுமுகமாகவே இருக்கிறது.

பயணிகளின் அவதியை போக்க கூடுதல் விமான சேவை வழங்கும் என விமான பயணிகள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Related Posts