இந்திய செய்திகள்

அமைச்சரின் அதிரடி உத்தரவு விதி மீறல்களுடன்  செயல்பட்ட கல் குவாரி மூடல்?

நாள்: 25.05.2026
செய்தி வெளியீடு
கன்னியாகுமரி மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 2 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த மாண்புமிகு இயற்கை
வளங்கள் துறை அமைச்சர் அவர்கள் உத்தரவு.
கன்னியாகுமரி
மாவட்டத்தில்
பொதுமக்களிடமிருந்து
வரப்பெற்ற
புகார்களின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 15 கற்குவாரிகள்
புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநரால் ஆளில்லா விமானம் (Drone)
மூலம் ஆய்வு செய்யப்பட்டது.
இந்நிலையில், மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டி.கே.பிரபு அவர்கள் 25.05.2026 கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். மாண்புமிகு அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மேற்கண்ட ஆளில்லா விமான (Drone) ஆய்வறிக்கையின் அடிப்படையில், மொத்தமுள்ள 15 கற்குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 2 கற்குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. மேலும், கன்னியாகுமரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர் அவர்களின் விரிவான
ஆய்வறிக்கையின் அடிப்படையில் உரிய மேல்நடவடிக்கை தொடரப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

Related Posts