பிரபல தமிழ் நடிகர் சூர்யா நடிப்பில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளிவரும் திரைப்படம் கங்குவா, உலகம் முழுவதும் இன்று நவம்பர்14 வெளியாகிறது .சிங்கப்பூரில் இந்திய நேரப்படி 7:30 மணிக்கு இந்த திரைப்படம் வெளியிடப்படுகிறது குறிப்பாக தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு இந்திய நேரப்படி இந்த திரைப்படம் திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் கங்குவா திரைப்படம் வெளியாகுவதற்கு முன்பே 1223 டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன.
சிங்கப்பூரில் கங்குவா திரைப்படம் 104 மேற்பட்ட காட்சிகள் 24 இடங்களில் திரையிடப்படுகிறது.
தமிழ்நாட்டின் நடிப்பின் நாயகன் சூர்யா அவர்களின் திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாகும் போது எந்த அளவிலான கொண்டாட்டங்கள் இருக்குமோ அதுவே அளவிலான கொண்டாட்டங்கள் சிங்கப்பூரில் இருக்கும் என அவரது ரசிகரும் நடிகர் சூர்யா நற்பணி மன்றத்தின் நிர்வாகியூமான கார்கவயல் கார்த்திக் தெரிவித்தார் .
