இந்திய செய்திகள்

தமிழக முதல்வர் உடன் மாநில அளவிலான உறுதிமொழி போதைக்கு எதிராக ஏற்கப்பட்டது. 

ஆக:11

தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் 11- 8- 2026 சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி  ஏற்கப்பட்டது.

நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் கல்லூரிகளில் போதை மற்றும் புகை இல்லா வளாகம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அழிப்பு நடவடிக்கையை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் பார்வையிட்டார் .

போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை ஆளிநர்களுக்கு 2026 ஆம் ஆண்டிற்கான போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கங்களை வழங்கி அவர்களை சிறப்பித்தார் .

Related Posts